பயணிகள் யாரும் வரக்கூடாது - புதுக்கோட்டை மாநகராட்சியின் பேனரால் குழம்பி போன பயணிகள்.!
peoples confuse for muncipality banar in putokottai bus stand
பயணிகள் யாரும் வரக்கூடாது - புதுக்கோட்டை மாநகராட்சியின் பேனரால் குழம்பி போன பயணிகள்.!
புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 42 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் சுமார் 52 பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு இடவசதி, 3 இடங்களில் பயணிகள் காத்திருப்பு பகுதி, 2 கட்டணக் கழிப்பறைகள், இருசக்கர வாகன நிறுத்துமிடம், புறக்காவல் நிலையம் மற்றும் 60 கடைகள் உள்ளன.
இந்தநிலையில், இந்தப் பேருந்து நிலையக் கட்டிடம் பலவீனமானதால் கட்டிடத்தின் மேற்கூரை அவ்வப்போது இடிந்து விழுவதும், அதை நகராட்சி நிர்வாகம் தற்காலிக சீரமைப்பதும், இதில் பலர் காயமடைந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் இப்பேருந்து நிலையத்தில் அறந்தாங்கி பேருந்துகள் நிறுத்தக் கூடிய பகுதியில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தாய், மகன் காயமடைந்தனர்.
இதையடுத்து, இடிந்த பகுதியில் ஆபத்தான நிலையில் இருந்த மேற்கூரையை அவசர அவசரமாக இடித்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதிக்குள் யாரும் வராமல் இருக்கும் வகையில் தடுப்பும் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்தப் பேருந்து நிலையத்துக்குள் யாரும் செல்ல வேண்டாம் என்று பேருந்து நிலையத்தின் வெளிப்பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பு பலகையில், ‘பேருந்து நிலைய கட்டிடம் சேதமடைந்துள்ளதாலும், அபாயகரமாக உள்ளதாலும், மேற்படி கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பயணிகள் யாரும் பேருந்து நிலையத்துக்குள் செல்ல வேண்டாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் யாரும் உள்ளே செல்ல வேண்டாம் என்று அறிவிப்பு பலகை வைத்தாலும் எப்போதும் போல இயங்கி வரும் புதுக்கோட்டை பேருந்து நிலையம். ஆனால், அதேசமயம் பேருந்து நிலையத்தில் இருந்தே தொடர்ந்து அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், ஆபத்தான நிலையில் உள்ள பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகளை மட்டும் அனுமதித்துவிட்டு, பயணிகள் யாரும் உள்ளே செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பயணிகள் தெரிவித்ததாவது:- "ஆபத்தான நிலையில் கட்டிடங்கள் இருப்பதாக கூறிவிட்டு, பேருந்து நிலையத்தை பயன்பாட்டில் வைத்துக்கொண்டே பொதுமக்களை பயன்படுத்தக்கூடாது என்றால் அவர்கள் எங்கே செல்வார்கள்?. மக்களின் உயிருடன் விளையாடாமல் பேருந்து நிலையத்தை காலி செய்துவிட்டு, தற்காலிக பேருந்து நிலையத்தை உடனடியாக பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்றுத் தெரிவித்தனர்.
English Summary
peoples confuse for muncipality banar in putokottai bus stand