பரந்தூர் விமான நிலையம் : ஐந்தாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றும் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு உள்பட அதனை சுற்றியுள்ள பதின்மூன்று கிராமங்களில் நிலம் கையகப்படுத்துதற்கான பணிகள் நடைப்பெற்று வருகிறது. இதற்காக மொத்தம் 4,971 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஆனால், இந்த நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதற்காக கைகளில் கறுப்புக்கொடி ஏந்தியும், வீடுகளில் கறுப்புக்கொடி கட்டியும் ஆண்கள், பெண்கள், மற்றும் இளைஞர்கள் என்று அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதுமட்டுமல்லாமல், கிராமசபையில் மக்களின் குடியிருப்புகளையும், வாழ்வாதாரங்களையும் இழப்பதாக தீர்மானங்களை நிறைவேற்றினர். அதன் பின்னர் பல மாதங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் ஐந்தாவது முறையாக பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள்  தீர்மானம் நிறைவேற்றினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

peoples fifth time resolution pass in paranthur airport issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->