தேனியில் அதிசயம் - போலி மருத்துவருக்கு ஆதரவாக திரண்ட கிராம மக்கள்.!  - Seithipunal
Seithipunal


தேனியில் அதிசயம் - போலி மருத்துவருக்கு ஆதரவாக திரண்ட கிராம மக்கள்.! 

தேனி மாவட்டத்தில் உள்ள ரெங்கராம்பட்டி கிராமத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாபு என்பவர் கிளினிக் ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவர் போலி மருத்துவர் என்று ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நல இணை இயக்குநர் போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் போலீஸார், பாபுவை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து கிராம மக்களுக்குத் தகவல் தெரிய வந்தது. அதன் பின்னர் கிராம மக்கள் அனைவரும் காவல் நிலையம் முன்பு ஒன்றுத் திரண்டனர். 

அங்கு அவர்கள் கைது செய்யப்பட்ட பாபுவை உடனே விடுவிக்க வேண்டும். அவர் மருத்துவம் பார்த்து இதுவரை யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அவர் ஏழைகளுக்கு பணம் வாங்காமல் கூட மருத்துவம் செய்வார் என்றுத் தெரிவித்தனர் 

அதன் பின்னர் போலீசார் பாபு மீது வழக்குப் போடாமல் அவரை இனிமேல் அலோபதி மருத்துவம் செய்யக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர். போலி மருத்துவருக்கு ஆதரவாக ஒரு கிராம மக்களே ஒன்றுத் திரண்ட சம்பவம் போலீஸாருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

peoples support fake doctor in theni


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->