மெட்ரோவில் 5 ரூபாய் கட்டணம் - நாளை முதல் பயணிக்கலாம்.! - Seithipunal
Seithipunal


சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த நவம்பர் மாத்தில் மட்டும் 80 லட்சத்து ஆயிரத்து 210 பேர் பயணம் செய்துள்ளனர். 

அதிகபட்சமாக நவம்பர் 10-ந்தேதி 3 லட்சத்து 35 ஆயிரத்து 677 பேர் பயணம் செய்துள்ளனர். மெட்ரோ ரெயில் நிறுவனம் கியூ ஆர் குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ் அப் டிக்கெட் உள்ளிட்ட பயணச்சீட்டுகளுக்கு 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.

இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் நிறுவன தினத்தை முன்னிட்டு, நாளை ஒரு நாள் மட்டும் கியூ ஆர் குறியீடு பயணச்சீட்டு உள்ளிட்ட முறையை பயன்படுத்தி மெட்ரோ பயணிகள் ரூ.5 என்ற கட்டணத்தில் பயணம் செய்யலாம். 

பயணிகளின் ஆதரவு மற்றும் நம்பிக்கைக்கு எங்களின் பாராட்டுக்கு அடையாளமாக இந்த சிறப்பு கட்டணம் " என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

peoples travel five rupees ticket in metro train at tomarrow


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->