தனிநபர் வருமானம் ரூ.3 லட்சமாக உயர்வு: பட்ஜெட் உரையில் கவர்னர் தகவல்! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் தனி நபர் வருமானம் 5.33 சதவீதம் அதிகரித்து கடந்த ஆண்டின் ரூ.2 லட்சத்து 87 ஆயிரத்து 354ல் இருந்து ரூ.3 லட்சத்து 2 ஆயிரத்து 680ஐ அடைந்துள்ளது என்றும் என  ஆளுநர் கைலாஷ்நாதன் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.ஆளுநர் உரையை வாசிக்க சட்டப்பேரவைக்கு வந்த துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.அதனை தொடர்ந்து ஆளுனருக்கு , பூங்கொத்து கொடுத்து சபாநாயகர் வரவேற்று பேரவைக்கு அழைத்து சென்றார்.

இதையடுத்து தமிழ்தாய் வாழ்த்துடன் பேரவை தொடங்கியது.அப்போது "இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு" திருக்குறளுடன் தனது உரையை தொடங்கினார் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன்.அப்போது அவரது உரையில் கூறியிருப்பதாவது:-

ஏ.எப்.டி. உதவி திட்டம், நபார்டு வங்கிகள் மூலம் தற்போது நடைபெறும் பணிகளுக்கு ரூ.659 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும்  வரும் ஆண்டில் ரூ.8 ஆயிரத்து 467 கோடிக்கான புதிய பணிகளும் மேற்கொள்ளப்படும். பிரதமர் ஏக்தா மால் ஏற்படுத்த ரூ.104 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என தெரிவித்தார்.

புதுவை விமான நிலையம்  விரிவுபடுத்தவும், ரெயில் நிலையத்தை விரிவாக்கம் செய்யவும் பணிகள்நடைபெறும் என்றும்  ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம்  ரூ.620 கோடிக்கான திட்ட பணிகளில்   ரூ.175 கோடிக்கான பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும் ரூ.445 கோடிக்கான பணிகள் நடைபெற உள்ளது என கூறினார்.

மேலும் புதுவையில் புதிய ஒருங்கிணைந்த பஸ் வளாகம் விரைவில் பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது என்றும் அரசு எடுத்த ஆக்கப்பூர்வ நடவடிக்கையால் 2020-21ம் ஆண்டில் ரூ.8 ஆயிரத்து 418.96 கோடியிலிருந்து மாநில வருவாய், 2023-24ம் ஆண்டில் ரூ.11 ஆயிரத்து 311.92 கோடியாக உயர்ந்து 34.36 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது என அப்போதுதுணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தனது  உரையில்  தெரிவித்தார்.

மேலும் தற்போதைய நிலையில் தனி நபர் வருமானம் 5.33 சதவீதம் அதிகரித்து கடந்த ஆண்டின் ரூ.2 லட்சத்து 87 ஆயிரத்து 354ல் இருந்து ரூ.3 லட்சத்து 2 ஆயிரத்து 680ஐ அடைந்துள்ளது என்றும் இது  ஒவ்வொரு தனிநபரிடமும் கூடுதலாக ரூ.15 ஆயிரம் வருவாய் தரவுகள் அதிகரித்துள்ளது என இவ்வாறு ஆளுநர் கைலாஷ்நாதன் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Per capita income rises to Rs 3 lakh: Governor in Budget speech


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->