பெரம்பலூரை சார்ந்த இராணுவ வீரர் மாரடைப்பால் மேற்கு வங்கத்தில் மரணம்.! - Seithipunal
Seithipunal


பணியில் இருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு தமிழகத்தை சார்ந்த இராணுவ வீரர் மேற்கு வங்கத்தில் பலியான சோகம் அரங்கேறியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காரை பகுதியை சார்ந்தவர் சங்கர். இவர் இராணுவத்தில் பணியாற்றி வருகிறார். சங்கர் தற்போது மேற்கு வங்கத்தில் பணியாற்றி வரும் நிலையில், இன்று திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 

நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்த சமயத்தில், திடீர் மாரடைப்பு ஏற்பட்டு நெஞ்சை பிடித்து வலியுடன் அலறி விழுந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த இராணுவ நண்பர்கள், அவருக்கு அங்கு வந்து முதலுதவி செய்து, உடனடியாக இராணுவ மருத்துவமனையில் அவரை அனுமதி செய்துள்ளனர். 

இராணுவ மருத்துவமனையில் சங்கரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பால் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பான தகவல் காரையில் உள்ள சங்கரின் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த தகவலை அறிந்த குடும்பத்தினர் பெரும் சோகத்திற்கு உள்ளாகிய நிலையில், அவரது உடல் நாளை தமிழகம் கொண்டு வரப்படும் என சக இராணுவ வீரர்கள் தகவல் தெரிவித்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இராணுவ வீரர் சங்கரின் மறைவு அவரது குடும்பத்தினரிடையேயும், கிராமத்தினரிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Perambalur Army Officer Sankar Died at West Bengal Camp Cardiac arrest 11 July 2021


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->