பெரம்பலூர்: கர்ப்பிணியும், குழந்தையும் திடீர் மரணம்.. உடல்நலக்குறைவால் சோகம்.! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கவுல்ப்பாளையம் பகுதியில் கூலித் தொழிலாளியான மணி என்பவருக்கு கடந்த நவம்பர் மாதத்தில் சங்கீதா என்ற 19 வயது பெண்ணுடன் திருமணம் நடந்தேறியது. தற்போது, மனைவி சங்கீதா நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்துள்ளார்.

இத்தகைய சூழலில், நேற்று முன்தினம் திடீரென்று சங்கீதாவுக்கு இரவு நேரம் உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, வீட்டில் இருந்தவர்கள் சங்கீதாவை உடனே பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அதிகாலை சங்கீதா உயிரிழந்துள்ளார்.

அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்து விட்டது. இது குறித்து சங்கீதாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பெண் மற்றும் வயிற்றில் இருந்த குழந்தை இரண்டும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகவும் சோகத்தை உருவாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Perambalur Kavulpalaiyam pregnant lady died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->