பெரம்பலூர்: ஒரு(தறு)தலைக்காதலால் பெண் குத்திக்கொலை.. விசாரணை பயத்தில் கொடூரன் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


ஒருதலைக்காதல் செய்த காமுகன், காதலை ஏற்றுக்கொள்ளாத பெண்ணை கொலை செய்து தானும் தற்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. 

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொளப்பாடி கிராமத்தை சார்ந்தவர் அருள்பண்டியன் (வயது 25). இவர் கோழிப்பண்ணை வைத்திருக்கிறார். அங்குள்ள அல்லி நகரம் கிராமத்தை சார்ந்தவர் முருகேசன். இவரது மகள் தனலட்சுமி (வயது 21). 

அருள் பாண்டியன் தனலட்சுமியை கடந்த சில வருடமாக ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், தனது காதலை ஏற்றுக்கொள்ளக்கூறி பலமுறை தனலட்சுமியிடம் தெரிவித்த நிலையில், அவர் காதலை ஏற்க மறுப்பு தெரிவித்து எச்சரித்துள்ளார். 

காதல் என்ற மாய வலையில் உறுதியாக இருந்த கொடூரன், தனலட்சுமியிடம் தொடர்ந்து காதல் தொல்லை விஷயங்களை அரங்கேற்றி வந்துள்ளான். இந்நிலையில், தனலட்சுமி உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்துள்ளார். 

இதனைக்கண்ட அருள் பாண்டியன் கத்தியை எடுத்து சென்று அவரது முதுகில் குத்தியுள்ளான். இதனால் நிலைதடுமாறி பெண்மணி வாகனத்தில் இருந்து கீழே விழுந்து மயங்கியுள்ளார். இவரை மீட்ட உறவினர் உடனடியாக அங்குள்ள அரியலூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று அனுமதி செய்துள்ளார்.

மருத்துவமனையில் தனலட்சுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த குன்னம் காவல் துறையினர், தனலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

பின்னர், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளையில், அருள் பாண்டியன் தனலட்சுமியை திருமணம் செய்ய பெற்றோர்களிடம் முறையிட்டு வந்ததும், இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தது உறுதியானது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தனலட்சுமியை கொலை செய்துள்ளதும் அம்பலமானது. 

இதனையடுத்து, கொடூரன் அருள் பாண்டியனை காவல் துறையினர் தேட தொடங்கிய நிலையில், இதனை அறிந்த அருள் பாண்டியன் வயலுக்கு சென்று மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். அவனது உடலையும் மீட்ட அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Perambalur Kunnam Village Kolappadi One Side Love Youngster Murder girl and He Suicide died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->