டீ கடை கல்லாப்பெட்டியில் கைவைத்த கில்லாடி கொள்ளையர்கள்! மூன்றாவது கண்ணில் வசமாக சிக்கியது எப்படி?! - Seithipunal
Seithipunal


பெரியபாளையம் அருகே டீ கடையில் ரூ. 10400 கொள்ளையடித்தவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்: 

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே மஞ்சங்காரணை கிராமத்தில் திருவேற்காடு பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் சொந்தமாக டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். 

நேற்று முன்தினம் இவரது கடையில் இரவு நேரத்தில் பூட்டை உடைத்து கடையில் இருந்த ரூ.10 ஆயிரத்து 400 மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றதால், இது குறித்து பெரியபாளையம் போலீசில் ஸ்ரீதர் புகார் அளித்துள்ளார். 

புகாரின் பேரில் துணை தலைமை காவலர் சங்கர் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் டீக்கடையில் கொள்ளலையடித்தது சென்னை, அயனாவரத்தை சேர்ந்த சரவணன் (வயது18) மற்றும் இவரது நண்பர் (வயது 17) சிறுவன் என்பது தெரியவந்தது. 

பின்னர் போலீசார் அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்து சிறுவனை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், சரவணனை திருவள்ளூர் கிளை சிறையிலும் போலீசார் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

periyapalayam near robbery case 2 peoples arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->