பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜாமினில் விடுவிப்பு.!! - Seithipunal
Seithipunal


சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட  பின் தங்கிய மாவட்டங்கள் உயர்கல்வி பெறுவதற்காக சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் கல்வி வழங்குவதற்காக தனி நிறுவனம் ஒன்றை தொடங்கியதாக பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். ஆப்டெக்கான் ஃபோரம் என்ற பெயரில் அமைப்பை உருவாக்கி பல்கலைக்கழகத்தை விட அதிக வருவாய் ஈட்டும் விதமாக அந்த நிறுவனத்தை செயல்படுத்தி வந்துள்ளார். பெரியார் பல்கலைக்கழக சட்ட பிரிவு 19 இன் படி பொது ஊழியர்களாக கருதப்படுவார்கள். அவர்கள் புதிதாக எந்த தொழிலையும் தொடங்க முடியாது. தனி நிறுவனம் தொடங்குவதற்கும்  மற்றும் முதலீடு செய்வதற்கு அனுமதியும் கிடையாது. அவ்வாறு செய்ய வேண்டும் என்றால் பல்கலைக்கழக அனுமதியும், தமிழக அரசு அனுமதியும் பெற வேண்டும்.

 பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் விதிமுறைகளை மீறி தன்னிச்சையாக செயல்பட்டு வந்ததால் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ஜெகநாதன் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நீதிபதியின் முன்பு ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் 7 நாட்கள் ஜாமினியின் விடுவிக்கப்பட்டுள்ளார். அடுத்த 7 நாட்களுக்கு சூரமங்கலம் காவல் நிலையத்தில் ஆஜரராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ஜெகநாதன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் நேற்று மாலை கைது செய்யப்பட்டவர் ஜெகநாதன் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Periyar University Vice Chancellor jagannathan released on bail


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->