சென்னையில் விரைவில் நிரந்தர புத்தகப் பூங்கா - தமிழக முதல்வர் ஸ்டாலின்.!
Permanent book park in Chennai MK Stalin
சென்னையில் 46வது புத்தகத் திருவிழா நேற்று மாலை தொடங்கியது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரங்கங்கள் அமைக்கப்பட்டன.
இந்த புத்தக திருவிழாவை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நேற்று தொடங்கிய சென்னை புத்தகத் திருவிழா வரும் ஜனவரி 22 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை புத்தகத் திருவிழா நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் "இனி அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடைபெறும். புத்தக கண்காட்சி நடத்த ரூ.75.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் தங்களுக்கு தேவையான விருப்பமான புத்தகங்களை பெற இயலும். அவ்வாறு நடத்தப்படும் புத்தக கண்காட்சியில் புத்தக விற்பனை மட்டுமின்றி சிறப்பான இலக்கிய சொற்பொழிவுகளும் நடத்தப்படும்" என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் நிரந்தரமாக புத்தக பூங்கா அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் முடிவடைந்த உடன் சென்னையில் நிரந்தரமாக புத்தகப் பூங்கா அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், கருணாநிதி பெயரில் ரூ.114 கோடி மதிப்பில் மதுரையில் நூலகம் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
English Summary
Permanent book park in Chennai MK Stalin