சிறுமுகை டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு..!! மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்..!! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மீது தாக்குதல் நடக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டம்,  மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை வெள்ளிகுப்பம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக விஜய் ஆனந்த் என்பவரை சில மறுமணவர்கள் கத்தி முனையில் வழிமறித்தனர். பொதுமக்கள் கூடியதால் அவரை விட்டுவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர்.

அதேபோன்று கடந்த ஆகஸ்ட் மாதம் சிறுமுகை டாஸ்மாக் பாரில் வேலை செய்து வந்த முருகேசன் என்பவரை மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். சிறுமுகை டாஸ்மாக்கை குறி வைத்து பல்வேறு குற்ற சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் மேலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

அதே டாஸ்மாக் கடையின் மீது மர்ம நபர்கள் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. டாஸ்மாக் கடையில் வைக்கப்பட்டிருந்த சில ஆயிரம் மதிப்பிலான மதிபாட்டல்கள் எரிந்து சேதமடைந்தன. சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Petrol bomb attack on coimbatore Tasmac shop


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->