நள்ளிரவில் வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு - நெல்லையில் பயங்கரம்.!
petrol bomb attack to house in tirunelvei
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பள்ளக்கால் பொதுக்குடி கிராமத்தில் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் செய்யது மசூது ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வரும் இவர் வழக்கம்போல் நேற்று இரவு 11.25 மணி அளவில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே 2 இருசக்கர வாகனங்களில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் மசூதை வழிமறித்தது. இதனால் பயந்துபோன மசூது அருகில் உள்ள தெருவுக்குள் ஓட்டம் பிடித்தார். உடனே அந்தக் கும்பல் மசூதுவை ஓட ஓட விரட்டிச்சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டியது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்துச் சென்றது.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயம் அடைந்த மசூதுவை மீட்டு அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கிடைத்த தகவல் அடிப்படையில் அங்கு போலீசார் விரைந்து சென்றனர். அங்கு பாய் வியாபாரியான மைதீன் என்பவரது வீட்டின் கதவு மற்றும் ஜன்னலை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர். நள்ளிரவில் மர்ம கும்பல் பெட்ரோல் குண்டு வீசி அரிவாளால் வாலிபரை வெட்டிய சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
English Summary
petrol bomb attack to house in tirunelvei