மளிகை கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு! 3 பேர் கைது..பரபரப்பு வாக்குமூலம்! - Seithipunal
Seithipunal


திருச்சியில் பூட்டி கிடந்த மளிகை கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த போளூர்பட்டி சேர்ந்த ஞானசேகரன் சொந்தமான கடையை தொட்டியம் பால சமுத்திரத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கு கடை நடத்துவதற்கு விட்டுள்ளார்.

இந்தநிலையில், நேற்று நள்ளிரவில் மர்ம கும்பல் திடீரென முருகானந்தம் நடத்திவரும் மளிகை கடையின் முன் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வெளியில் வைக்கப்பட்டிருந்த உப்பு மூட்டைகள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

பெட்ரோல் குண்டு சத்தம் கேட்டு வெளியில் எழுந்துவந்து பார்த்த ஞானசேகரன் கடையின் சுவரின் சிறு பகுதி பெயர்ந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக தொட்டியம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் சம்பவ இடத்தை நேரில் பார்வை விட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

முதற்கட்ட விசாரணையில் பெண்ணுடன் பேசுவது தொடர்பாக ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்று இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து சந்தேகத்தின் பேரில் 3 பேரை காவல் நிலையம் அழைத்து வந்து காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

petrol bomb hurled at a locked grocery store in Trichy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->