சென்னையில் அடுத்த பரபரப்பு.. பாமக நிர்வாகி வண்ணை சத்யா வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.!! - Seithipunal
Seithipunal


சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் பாமக மாவட்ட செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சேர்ந்த பாமக மாவட்ட செயலாளர் வண்ணை சத்யாவின் மகன் நிஷால் இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே 3 வாகனத்தில் வந்த 5க்கும் மேற்பட்டோர் அவரை கொலை செய்ய முயற்சி செய்து உள்ளனர்.

இதில் நிஷால் சம்பவம் நடைபெற்ற இடத்தில் தனது இரு சக்கர வாகனத்தை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இது தொடர்பாக அவருடைய தந்தை வண்ணை சத்யா தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்த அதே நேரத்தில் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. 

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் வண்ணை சத்யா மகனுக்கும் ஏற்பட்ட தகராறுக்கு பகை தீர்த்துக் கொள்ள நிஷாலை கொலை செய்ய முயற்சி செய்ததோடு, வண்ணை சத்யா வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த தண்டையார்பேட்டை போலீசார் 5 பேர் கொண்ட மர்ம கும்பலை தேடி வருகின்றனர். செங்கல்பட்டில் பாமக பிரமுகர் இரு தினங்களுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பதற்றம் அடங்குவதற்குள் தற்போது சென்னையில் பாமக நிர்வாகியின் மகனை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Petrol bomb hurled on PMK leader house in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->