விமானத்தில் பெட்ரோல் கசிவு - பயணிகளின் கதி என்ன?
petrol leak from singapore flight in chennai airport
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு இன்று காலை 11.55 மணிக்கு 'ஏர் இந்தியா' விமானம் புறப்பட இருந்தது.
இந்த விமானத்தில் 145 பயணிகள் இருந்த நிலையில், விமானம் புறப்படுவதற்கு முன்பாக விமானி இறுதிக்கட்ட பரிசோதனையை மேற்கொண்டார். அப்போது விமானத்தில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்த அவர், உடனடியாக விமானத்தை நிறுத்திவிட்டு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து பொறியாளர்கள் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் விரைந்து வந்து விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அதன் பின்னர் விமானம் புறப்பட்டுச் செல்லும் என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 145 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
English Summary
petrol leak from singapore flight in chennai airport