ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல் : நீலகிரிக்கு பன்றிகள் கொண்டு வரத் தடை.! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டத்தில் உருவாகியுள்ள ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல் குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த செய்தி குறிப்பில் அவர் தெரிவித்து இருப்பதாவது:- 

"நீலகிரி மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு வரவேற்பு மையம் அருகே அதிகளவில் காட்டு பன்றிகள் இறந்து கிடந்துள்ளன. அவற்றை பிரேத பரிசோதனை செய்து அதன் மாதிரிகளை இந்திய கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில், ஆப்ரிக்கன் பன்றிகாய்ச்சல் உறுதியாகியுள்ளது. 

இதனால், முதுமலை புலிகள் காப்பகத்தைச் சுற்றியுள்ள பன்றி வளர்ப்பு பண்ணைகளில் கால்நடை மருத்துவக்குழு சோதனை மேற்கொண்டது. அதில், எந்த பண்ணையிலும் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் அறிகுறியோ அல்லது இறப்புகளோ இல்லை. 

இருப்பினும், பன்றி வளர்ப்பு உரிமையாளர்களிடம் பண்ணையை சுற்றிலும் வேலி அமைத்தும், பண்ணையை சுற்றிலும் சோடியம் ஹைப்போ குளோரைட் அல்லது கால்சியம் ஹைப்போ குளோரைட், காஷ்டிக் சோடா உள்ளிட்டவற்றை தெளிப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த காய்ச்சல் மற்ற விலங்குகளுக்கோ, மனிதர்களுக்கோ எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. பன்றிகளை மட்டுமே தாக்க கூடியது. அதனால், இந்த நோயின் தாக்கம் குறையும் வரை அண்டை மாநிலங்களில் இருந்து, பன்றிகள் கொண்டு வறுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. 

இதன் காரணமாக மாநில எல்லைகளில் எட்டு சோதனை சாவடிகளில், கால்நடைத்துறை, வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் உள்ளிட்டோர் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் காட்டு பன்றிகள் பண்ணைக்குள் வருவதை தடுப்பதற்காக வளர்ப்பு பன்றிகளை கொட்டகைக்குள் பூட்டி வைத்து வளர்ப்பதற்கும், உணவகங்களில் இருந்து பெறப்படும் உணவு கழிவுகளையும் மற்றும் சந்தை பகுதிகளில் பெறும் காய்கறி கழிவுகளையும் இந்த நோய் தாக்கம் குறையும் வரை வளர்ப்பு பன்றிகளுக்கு உணவாக வழங்க தடை செய்யப்படுகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pigs banned in Nilgiris for African Swine Flu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->