மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு இன்ப சுற்றுலா.. முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த பெற்றோர்கள்!
Pleasure tour for mentally retarded children Parents thank the Chief Minister
மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் கொடைக்கானலுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். குழந்தைகளின் மகிழ்ச்சியை கண்டு மகிழ்ச்சியடைந்து பெற்றோர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு, அவர்கள் முன்னேற்றத்திற்கு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தனது மேற்பார்வையின் கீழ் கொண்டு வந்து, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை, தொழில் கடனுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பராமரிப்பு உதவித்தொகை உயர்த்தப்பட்டு மாதம் ரூ.2,000 வழங்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும். தமிழக அரசின் நலத்திட்டங்கள், சென்றடையும் வகையில், மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பல்வேறு நலத்திட்ட உதவிகள் உபகரணங்கள். உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளை ஒன்றிணைத்து அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் 6 வயதிற்குட்பட்ட 32 மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் ஒரு நாள் கல்விச் சுற்றுலாவாக கொடைக்கானலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். திண்டுக்கல் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ..சரவணன், அவர்கள், குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி. சுற்றுலா பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மன வளர்ச்சி குன்றியதாக கண்டறியப்பட்டு, ஆரம்ப நிலை பயிற்சிகள் பெற்று வரும் 32 குழந்தைகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் ஆகியோர் கல்விச் சுற்றுலாவில் கொடைக்கானலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கொடைக்கானலில் ஏரி, பில்லர் ராக் வட்டக்கானல், கோக்கர்ஸ் வால்க், பிரையன்ட் பூங்கா, பைன் பாரஸ்ட் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்குள்ள பூங்கா. பறவைகள், விலங்குகளை கண்டு குழந்தைகள் ரசித்தனர்.இதுகுறித்து சுற்றுலாவில் பங்கேற்ற குழந்தையின் பெற்றோர் ராஜேஸ்வரி தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏராளமான நலத்திட் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த திட்டங்களை திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தொழில் கடனுதவிகள் வழங்கப்படுகிறது.
தற்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் இந்த கல்விச் சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளனர்மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் கொடைக்கானலுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். கொடைக்கானலின் இயற்கை அழகை பார்த்ததில் எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. மனநலம் குன்றிய குழந்தைகளின் மன இறுக்கத்தை போக்கும் வகையிலும், அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும், இந்த கல்விச் சுற்றுலா இருந்தது. இதுபோன்ற சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் சார்பில் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார்.
மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள், அவர்களின் பெற்றோர்களின் மனநிலையை புரிந்துகொண்டு, அவர்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
English Summary
Pleasure tour for mentally retarded children Parents thank the Chief Minister