இன்று முதல் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்.!!
plus 2 exam answer paper correction work start
சமீபத்தில் நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று முதல் தொடங்கி நடைபெறுகிறது.
தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத் தேர்வு தொடங்கி நிறைவு பெற்ற நிலையில், தற்போது எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த மாதம் 3-ந்தேதி தொடங்கி 25-ந்தேதியுடன் முடிவடைந்தது.

மாணவர்களின் விடைத்தாள்கள் சேகரிக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இந்த நிலையில், இன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்க உள்ளன. இந்த விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 17-ந்தேதி நிறைவுபெற உள்ளன.
இதற்காக, மாநிலம் முழுவதும் 83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விடைத்தாள் திருத்தும் பணியில் சுமார் 46 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி முடிய முடிய மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, ஏற்கனவே, திட்டமிட்டபடி, மே 19-ந்தேதி தேர்வு முடிவை வெளியிடும் வகையில் திட்டமிட்டு பணிகள் நடப்பதாகவும் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
plus 2 exam answer paper correction work start