கிருஷ்ணகிரி || பட்டாசு குடோன் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி || பட்டாசு குடோன் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டை பகுதியில் ரவி என்பவர் பட்டாசு கடை மற்றும் குடோன் வைத்து நடத்தி வருகிறார். இந்தக் குடோனில் இன்று திடீரென பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறி பெரும் விபத்து ஏற்பட்டது. 

இந்த வெடிவிபத்தால் குடோன் அருகில் இருந்த மூன்று கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் சுமார் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், இந்த விபத்து குறித்து தகவலறிந்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். 

மேலும், பிரதமர் நரேந்திர மோடி வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் மத்திய அரசு சார்பில் நிவாரணமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi announce financial to krishnagiri fire accident died peoples family


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->