உலக புகழ்பெற்ற மருத்துவர் கே.எம்.செரியன் மறைவு - பிரதமர், முதலமைச்சர் இரங்கல்! - Seithipunal
Seithipunal


மருத்துவர் கே.எம்.செரியன் மறைவுக்கு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறுகையில், "நமது நாட்டின் புகழ்பெற்ற மருத்துவர் கே.எம்.செரியனின் மறைவால் துயரமடைந்தேன்.

இதய மருத்துவத்தில் மருத்துவர் கே.எம்.செரியனின் பங்களிப்பு எப்போதும் நினைவுகூரத்தக்கது" என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதேபோல் முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுதலை இரங்கல் செய்தியில், "ஃபிரான்டியர் லைஃப்லைன் மருத்துவமனையின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியும், இதய மாற்று அறுவை சிகிச்சையில் உலகளவில் புகழ்பெற்ற மருத்துவருமான கே.எம்.செரியன் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது.

இதய மாற்று அறுவை சிகிச்சையில் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றியது மற்றும் மருத்துவத் துறையில் அவரது பணி பலருக்கும் உத்வேகம் அளித்தது.

அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். அவரது பங்களிப்புகள் மருத்துவத்தில் சிறந்து விளங்க தொடர்ந்து ஊக்கமளிக்கும்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi CM Stalin condance doctor km seriyan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->