ஹெலிகாப்டரில் ராமேசுவர பயணம்! வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி!
PM Modi X Post Bamban Bridge
பாம்பனில் அமைந்துள்ள புதிய ரயில் பாலத்தினை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டரில் ராமேசுவரம் வந்தார்.
இந்த பயணத்தின்போது, ஹெலிகாப்டரிலிருந்தபடியே ராமர் பாலம் பகுதியில் திருப்பதரிசனம் செய்ததாகவும், அதில் ஆனந்தமும், ஆசிர்வாதமும் அனுபவித்ததாக பிரதமர் மோடி தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் வீடியோ வெளியிட்டு உள்ளார்.
அதில், "இலங்கையிலிருந்து திரும்பும் வழியில், ராமர் சேதுவின் தரிசனம் கிடைத்தது. அதே சமயத்தில் அயோத்தியில் ‘சூரிய திலகம்’ நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரண்டையும் ஒரே நேரத்தில் அனுபவிப்பது ஒரு பாக்கியம். ஸ்ரீராமரின் ஆசிர்வாதம் என்றும் நமக்கோடு நிலைத்து இருக்கட்டும்,” என குறிப்பிட்டு உள்ளார்.
பிரதமரின் தமிழக பயணம் இதுவரை:
புதிய பாலத்தைத் திறந்து வைக்க பிரதமர், எம்ஐ-17 ஹெலிகாப்டரில் மண்டபத்திற்கு வந்தார்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சரத்குமார், தமிழிசை, வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வரவேற்றனர்.
தமிழரின் பாரம்பரிய உடையான வெள்ளை வேட்டி மற்றும் சட்டையில் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பிரதமர், ராமேசுவரம் – தாம்பரம் ரயிலுக்கு கொடியசைத்து சேவையைத் தொடங்கினார்.
English Summary
PM Modi X Post Bamban Bridge