எங்களுக்கும் பேச தெரியும்! திருமாவளவன் இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் - அன்புமணி இராமதாஸ் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்தாவது, "பாட்டாளி மக்கள் கட்சி சமூக நீதிக்காக தொடங்கப்பட்ட ஒரு கட்சி. 36 ஆண்டு காலமாக எங்களுடைய மருத்துவர் அய்யா அவர்கள் ஆறு இட ஒதுக்கீடுகளை கொண்டு வந்துள்ளார்கள். 

அந்த இட ஒதுக்கீட்டில் இந்திய அளவில் பட்டியலின மக்கள் இட ஒதுக்கீட்டையும் பெற்று கொடுத்திருக்கிறார். தமிழகத்தில் அருந்ததியர் சமுதாயத்திற்கு உள் ஒதுக்கீட்டை பெற்றுத் தந்திருக்கிறார். சிறுபான்மை சமுதாயம் இஸ்லாமிய சமுதாயத்திற்கு உள் ஒதுக்கீடு பெற்று தந்திருக்கிறார். 

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயம் எம்பிசி பிரிவில் 115 சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு பெற்று கொடுத்திருக்கிறார். நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்ட ஓபிசி மக்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கட்டை பெற்றுக் கொடுத்திருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி. 

எங்கள் கட்சி சமூக நீதிக்காகவும், நீர் மேலாண்மைக்காகவும், வேளாண் வளர்ச்சிக்காகவும், இலவச தரமான கல்விக்காகவும், அனைவருக்கும் தரமான மருத்துவத்திற்காகவும், நேர்மையான ஆட்சிக்காகவும், அனைத்துக்கும் மேல் மது ஒழிப்புக்காகவும், புகையிலை ஒழிப்புக்காகவும், கஞ்சா ஒழிப்புக்காகவும், குட்காவை நாங்கள் தடை செய்திருக்கின்றோம், இப்படி எல்லாம் எத்தனையோ சாதனைகள் செய்த கட்சியை தொடர்ந்து திருமாவளவன் இழிவுபடுத்துக் கொண்டிருக்கிறார். 

அவர் அதை தவிர்க்க வேண்டும். எங்களுக்கும் பேசத் தெரியும், அவர்கள் கட்சி குறித்து எங்களாலும் தரக்குறைவாக பேச தெரியும். இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் மாநாடு நடத்தினால் நடத்தி விட்டுப் போங்க என்று அனபமணி இராமதாஸ் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Anbumani Ramadoss Condemn to VCK Thirumavalavan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->