மது ஒழிப்பில் நாங்கள் பிஹெச்டி, திருமாவளவன் எல்கேஜி - மரண பதிலடி கொடுத்த அன்புமணி இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்தாவது, "இந்தியாவில் மது ஒழிப்புக்கு மாநாடு நடத்தினாலும், போராட்டம் நடத்தினாலும், அதை யார் நடத்தினாலும் நாங்கள் ஆதரவு தெரிவிப்போம். அந்த வகையில் திருமாவளவன் மாநாடு நடத்தினால் ஆதரவு தெரிவிப்போம். அவர் அதற்காக கூப்பிட்டார், கூப்பிடவில்லை என்றெல்லாம் பிறகுதான். மதுவிலக்கு, மது ஒழிப்பு என்பது எங்களுடைய கட்சியின் அடிப்படை கொள்கை. 

மது ஒழிப்பில் நாங்கள் பிஹெச்டி படித்திருக்கிறோம். திருமாவளவன் இப்போதுதான் எல்கேஜி வந்திருக்கிறார். எங்கள் மருத்துவர் அய்யா அவர்கள் கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே 1980 முதல் மது ஒழிப்பு கொள்கையை கடைப்பிடித்துக் கொண்டு வருகிறார். 

மருத்துவர் அய்யா அவர்களால் தான் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியும், திருமாவளவன் உடைய கட்சி, திமுக, அதிமுக என அனைத்து கட்சிகளும், ஏன் மதுவைப் பற்றி பேசாத கட்சிகள் கூட இன்றைக்கு மதுவிலக்கு கொள்கையை, நாங்கள் கொள்கை ரீதியில் ஏற்றுக்கொண்டு இருக்கிறோம் என்று சொல்கிறார்கள் என்றால், அதற்கு மருத்துவர் அய்யாவும், பாமகவின் போராட்டமும் தான் காரணம்.

பாட்டாளி மக்கள் கட்சியில் மது ஒழிப்பு போராட்டத்திற்காக இதுவரை 15 ஆயிரம் பெண்கள் சிறைக்கு சென்றிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மாநாடுகள், வழக்குகள், நீதிமன்றம், சட்டமன்றம் என எத்தனையோ நாங்கள் நடத்தி இருக்கின்றோம், நடத்திக் கொண்டிருக்கிறோம். 

பாட்டாளி மக்கள் கட்சியால் இன்றைக்கு தமிழகத்தில் 3321 மது கடைகளையும், இந்திய அளவில் 90 ஆயிரம் மதுக்கடைகளையும் நாங்கள் மூடி இருக்கின்றோம். தமிழகத்தில் டாஸ்மார்க் கடை நேரத்தை குறைத்து இருக்கிறோம். எத்தனையோ கடைகளை நாங்கள் உடைத்து இருக்கிறோம். அதனால் எங்கள் மீது வழக்கு இருக்கிறது. 


 

இன்று தமிழகத்தில் யாரை வேண்டுமானாலும் கேளுங்கள்.. மது ஒழிப்பா,அது பாட்டாளி மக்கள் கட்சி தான் என்று சொல்வார்கள். நான் மத்திய அமைச்சராக இருந்தபோது தேசிய அளவில் தேசிய மதுக் கொள்கை என்ற ஒரு பாலிசியை கொண்டு வந்தேன். அதன் பிறகு அதை விட்டு விட்டார்கள்.  மத்திய அமைச்சராக இருந்த நேரத்தில் ஐநா சபையில் அக்டோபர் இரண்டாம் நாள் மது இல்லா நாள் என்ற தீர்மானத்தை நான் கொண்டு வந்தேன். அதற்கு 80 நாடுகள் ஆதரவு கொடுத்தார்கள். 

இவ்வளவு சாதனைகளை நாங்கள் செய்து வந்து கொண்டிருக்கிறோம். எங்களை பொறுத்தவரை தமிழகத்தில் ஒரு சொட்டு மது இருக்கக் கூடாது என்பதுதான். எனவே நீங்கள் மதுவிலக்கு மாநாடு நடத்திக் கொள்ளுங்கள். நடத்திவிட்டு போங்கள். ஆனால் மற்ற கட்சிகளை, எங்களைப் பற்றி இழிவுபடுத்தாதீர்கள் என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Anbumani Ramadoss Reply to VCK Thirumavalavan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->