50 இலட்சம் இளைஞர்களுடன் மாபெரும் போராட்டம்... மருத்துவர் அன்புமணி உச்சகட்ட எச்சரிக்கை.!
PMK Dr Anbumani Ramadoss MP Speech about 20 % Vanniyar Reservation 22 November 2020
20% தனி இட பங்கீடு போராட்டத்தை எவ்வாறு நடத்துவது? எந்த தேதியில் நடத்துவது? என்பது குறித்து விவாதித்து முடிவெடுப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் ஆகிய அமைப்புகளில் கூட்டுப் பொதுக்குழு கூட்டம் இணையவழியில் 22 - ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 11.00 மணிக்கு மருத்துவர் இராமதாஸ், மருத்துவர் அன்புமணி M.P அவர்கள் முன்னிலையில் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேசுகையில், " இந்தியாவிலேயே 3 இட ஒதுக்கீடை போராடி பெற்ற ஒரே தலைவர் மருத்துவர் இராமதாஸ் தான். வன்னியர்களுக்கு மட்டும் பல துரோகங்களை அரசுகள் செய்துள்ளது. அனைத்து மக்களுக்காக உழைத்து வாழும் வன்னியர் சமூகம், இன்று வாழவே வழியில்லாமல் தத்தளித்து வருகிறது.
சிலை வைப்பதற்கும், மணிமண்டபம் கட்டுவதற்கும் வன்னியர்களின் வளர்ச்சிகளுக்கு என்ன சம்பந்தம் இருக்கிறது. மணிமண்டபம் கட்டி, சிலை வைத்தால் போதுமா?.. பிள்ளைகள் எப்படி படிப்பார்கள்?. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் மட்டுமே, அந்த இளைஞர்கள் படித்து முன்னேறுவார்கள்.
வன்னியர்களுக்கு நலவாரியம் என்ற பெயரில், வன்னியர்களுக்கு பெரும் துரோகத்தை செய்து வருகின்றனர். அதன் பின்னணி தெரியாமல் அனைவரும் அதை பாராட்டி வருகின்றனர். நலவாரியம் என்பது வன்னிய இளைஞர்களின் வளர்ச்சிக்காக, அரசு முதலீடு செய்து துவங்கியிருக்க வேண்டும். நலவாரியத்தின் மூலமாக வளர்ச்சி இருக்க வேண்டும். முன்னதாக தொடங்கப்பட்ட பிற நலவாரியத்தை இணைத்து ஒன்றும் செய்ய இயலாத அளவிற்கு மாற்ற கூடாது.
பாட்டாளி மக்கள் கட்சியால் வளர்ந்தவர்கள், இன்று துரோகம் செய்து வருகின்றனர். 20 விழுக்காடு இட ஒதுக்கீடு கோரிக்கை என்பது நியாயமான கோரிக்கை ஆகும். அதனை ஆட்சியாளர்கள் கட்டாயம் நிறைவேற்றியாக வேண்டும். தமிழகத்தில் 4 இல் 1 பங்கு மக்கள் முன்னேற்றம் இல்லாமல் இருந்தால், தமிழகம் எப்படி முன்னேறும். ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுத்து, அனைவருக்கும் சமமாக பிரித்து கொடுங்கள் என்ற வாதத்தையே முன்வைத்து வருகிறோம்.
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படாத பட்சத்தில், மிகப்பெரிய போராட்டத்தை தமிழகம் எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும். இதனை தமிழக அரசு கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். தகவல் தொழில்நுட்பம் இல்லாத காலத்திலேயே, கடிதம் மூலமாக மாபெரும் போராட்டத்தை மருத்துவர் இராமதாஸ் நடத்தினர். தற்போதுள்ள தொழில்நுட்ப விஷயங்களை கருத்தில் கொண்டு அரசு சுதாரித்து செயல்பட வேண்டும். தமிழகத்தில் வன்னியர்களுக்கு தனியொரு இட ஒதுக்கீடு கொடுக்காத பட்சத்தில், 50 இலட்சம் வன்னிய இளைஞர்களை திரட்டி என் தலைமையில் போராட்டம் நடத்துவேன் " என்று தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
PMK Dr Anbumani Ramadoss MP Speech about 20 % Vanniyar Reservation 22 November 2020