மருத்துவர் இராமதாஸ் பிறந்தநாள்: முக ஸ்டாலின், டிடிவி, அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து! - Seithipunal
Seithipunal


சமூக நீதி போராளி, சமூகநீதி காவலர், பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்களின் 86 வது பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான முக ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் ஐயா அவர்களின் பிறந்தநாளில், அவர் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன்

அம்மா மக்கள் முன்னேற்றக்கழக்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியுமான ஐயா மருத்துவர் திரு. ராமதாஸ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழக மக்களின் உரிமை சார்ந்த போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வரும் ஐயா மருத்துவர் திரு.ராமதாஸ் அவர்கள் பூரண உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் மக்கள் பணிகளை தொடர எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். 

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் உரிமைகளுக்காக, 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் குரல் கொடுத்து வரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான, ஐயா திரு மருத்துவர் இராமதாஸ் அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். 

தமிழகத்தின் நலனுக்காகவும், தமிழக மக்கள் மேம்பாட்டிற்காகவும் அயராது உழைத்து வரும் ஐயா திரு. மருத்துவர் இராமதாஸ் அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான் பாண்டியன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் திரு.ச.இராமதாசு அவர்களின் பிறந்த நாளில் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

சமூகநீதிப் பாதையில் நீண்ட ஆயுளுடனும், உடல் ஆரோக்கியத்துடனும் இன்னும் பல ஆண்டுகள் மக்கள் பணியைத் தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK Dr Ramadoss Birthday MKStalin TTVD Annamalai Wish


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->