என்எல்சி-க்கு எதிரான பாமக போராட்டம்.. கைது செய்யப்பட்ட 28 பேருக்கு நீதிமன்ற காவல்! - Seithipunal
Seithipunal


நெய்வேலி என்எல்சி-க்கு எதிராக பாமகவினர் நடத்திய போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 28 பேரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நேற்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இதில், என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸை போலீசார் கைது செய்தனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இதனையடுத்து போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். மேலும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், வானத்தின் மீது துப்பாக்கியால் சுட்டும் விரட்ட முயன்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்ட நிலையில் போக்குவரத்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 28 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 28 பேரும் இன்று நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

இதில், 2 சிறுவர்கள் என்பதால் அவர்களை கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK protest against NLC 28 peoples 15 days jail


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->