#JustIn : சென்னை வண்ணாரப்பேட்டை சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கு: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!  - Seithipunal
Seithipunal


சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த ஆறு பெண்கள், தனியார் தொலைக்காட்சி செய்தியாளர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் பாஜக பிரமுகர் உள்ளிட்ட 26 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கில் மொத்தம் 22 பேர் கைதாகிய நிலையில் நான்கு பேர் தலைமறைவாக இருந்து வந்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த நான்கு குற்றவாளிகளின் வழக்குகளை தனியாக பிரிந்த போக்சோ நீதிமன்றம் மீதம் இருக்கும் 22 பேரின் வழக்குகளை விசாரித்தது. 

வழக்கு விசாரணை முடிவில் 22 பேர் மீதும் குற்றம் இருப்பது உறுதியாகியது. இந்த வழக்கில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்ற 21 பேருக்கு தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதில் எட்டு பேருக்கு ஆயுள் தண்டனையும், இந்த வழக்கில் மீதமுள்ள குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பளித்துள்ளார். இந்த குற்றவாளிகள் புழல் சிறையில் அடைக்கப்படவுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pocso act case vannarapettai child 21 accusts got Jail


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->