சென்னையில் 3 பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை! கரிமுல்லா, அபிஷேக் உள்ளிட்ட 3 பேர் கைது!
PocsoAct chennai Student School Child Abuse
சென்னையில் மூன்று பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெரம்பூரைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் கடந்த 24ஆம் தேதி மாயமானார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில், செல்போன் டவர் உதவியுடன் வீணஸ் நகர் அருகே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கு சென்ற போலீசார், மாயமான சிறுமியுடன் மேலும் இரண்டு சிறுமிகள், அவர்களின் காதலர்களுடன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
சிறுவன் உட்பட மூன்று பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைதான கரிமுல்லா மீது 11 வழக்குகளும், 16 வயது சிறுவன் மீது 6 வழக்குகளும், அபிஷேக் மீது ஒரு வழக்கும் ஏற்கனவே நிலுவையில் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட மூன்று சிறுமிகளும் மகளிர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
English Summary
PocsoAct chennai Student School Child Abuse