நான் எழுதிய தமிழும் மாறவில்லை நாடும் மாறவில்லை கவிஞர் வைரமுத்து ட்விட் - Seithipunal
Seithipunal


நான் எழுதிய தமிழும் மாறவில்லை நாடும் மாறவில்லை கவிஞர் வைரமுத்து ட்விட்.!

தமிழ் சினிமாவின் பிரபல பாடலாசிரியர்களில் ஒருவர் வைரமுத்து. இவர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், சூர்யா, தனுஷ், விஜய் என்று முன்னணி பிரபலங்களின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார்.

நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான இவர் முதல் மரியாதை ரோஜா கருத்தம்மா பவித்ரா சங்கமம் தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட பல படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார்.

இதற்கிடையே கவிஞர் வைரமுத்து சமூகப் பிரச்சினைகளுக்காக அடிக்கடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு பதிவு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-

கலையின் சமூக கடமை

என்ன என்று கேட்பார்க்கு

 இந்த பாடலை பதிலாகலாம்.

38 ஆண்டுகளுக்கு முன்

நான் எழுதிய

தமிழும் மாறவில்லை

நாடும் மாறவில்லை என்பது

தேசிய துயரம்

என்று பதிவிட்டுள்ளா. தற்போது இந்த பதிவு வலைதளங்களில் அனைவரின் கவனத்தையும் எடுத்து வைரலாகி வருகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

poet vairamuththu tweet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->