உறுப்புகள் சிதைய கொன்ற காதலி.. வீட்டில் கிடைத்த அந்த பொருள்.! சிக்கிய முக்கிய ஆதாரம்.!
poison bottle in krishma house
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெய்யூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் 23 வயதான சரோன் ராஜ் என்பவர் படித்து வந்தார். இவர் தமிழக கேரளா எல்லையில் வசிக்கும் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
கடந்த அக்டோபர் 14ஆம் தேதி தனது நண்பருடன் காதலியை பார்க்க சென்ற நிலையில் அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் அவர் மட்டும் சென்றுள்ளார். சற்று நேரத்தில் திரும்பி வந்த அவர் நண்பனிடம் வயிறு வலிப்பதாக கூற அவரை நண்பர் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த அக்டோபர் 25ல் பரிதாபமாக உயிரிழந்தார். உடல் உறுப்புகள் செயலிழந்து அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிய நிலையில், இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் சரோன் ராஜின் பெண் தோழியை அழைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் வேறு திருமணம் செய்ய அந்த பெண் கொலை செய்தது தெரியவந்தது.
அவர் விஷம் கொடுத்து உடல் உறுப்புகளை செயல் இழக்க வைத்தார். அணு அணுவாக சித்திரவதையில் அந்த காதலன் செத்துப் போனார். இந்நிலையில், காதலனுக்கு கொடுத்த விஷப்பாட்டில் தற்போது போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த பெண் கிரிஷ்மா வீட்டிற்கு பின்புறம் விஷபாட்டில் கிடந்துள்ளது. இது வழக்கில் ஒரு முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது.
English Summary
poison bottle in krishma house