புளூடூத் ஏர்பட்ஸ் பயன்படுத்தி தேர்வு எழுதிய வாலிபர் - போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


புளூடூத் ஏர்பட்ஸ் பயன்படுத்தி தேர்வு எழுதிய வாலிபர் - போலீசார் வலைவீச்சு.!

தமிழகத்தில் நேற்று முன்தினம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வு நடைபெற்றது. இதற்காக தமிழகம் முழுவதும் தேர்வு மையம் அமைக்கப்பட்டது. 

இந்த நிலையில், வேலூர் அருகே காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வில் விருதம்பட்டையைச் சேர்ந்த அப்துல் பயாஸ் என்ற வாலிபர் தேர்வு எழுதுவதற்கு காதில் கட்டுடன் சென்றார். 

இதுகுறித்து அதிகாரிகள் கேட்டதற்கு காதில் அடிபட்டதால் கட்டு போடப்பட்டுள்ளது என்றுத் தெரிவித்தார். இதையடுத்து அறை கண்காணிப்பாளர் அவரை தேர்வு எழுதுவதற்கு அனுமதித்தினர். ஆனால் சிறிது நேரத்தில் அப்துல் பயாஸ் யாருடனோ பேசுவது போல் தெரிய வந்தது. 

இதைக்கவனித்த அறைகண்காணிப்பாளர் பயாஸிடம் காதில் இருந்த கட்டை பிரிக்குமாறுத் தெரிவித்துள்ளார். அப்போது, அவரது காதில் புளூடூத் ஏர்பட்ஸ் இருந்ததும், அதன் வழியாக அப்துல் யாரிடமோ கேட்டு தேர்வு எழுதியது கண்டு பிடிக்கப்பட்டது. 

இந்த சம்பவம் குறித்து அறை கண்காணிப்பாளர் போலீசில் புகாரளித்தார். அந்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அப்துல் பயாசை வலைவீசி தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police case file on man for wearing bluetooth in exam hall


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->