டாஸ்மாக் கடையில் இருந்து வந்த முணுமுணுப்பு சத்தம்.. எட்டிப் பார்த்த போலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கவரைப்பேட்டை அருகே தண்டலச்சேரி பகுதியில் அரசு டாஸ்மாக் இயங்கி வருகிறது. இந்த கடையின் விற்பனையாளர்கள் நேற்று இரவு வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர். 

நள்ளிரவு நேரத்தில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது, கடையில் ஏதோ முணுமுணுப்பு சத்தம் கேட்பதை கண்டு அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது டாஸ்மாக் கடையின் சுவரை துளையிட்டு மர்ம நபர்கள் இருவர் உள்ளே சென்று மது அருந்திக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.

 இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை கையும், களவுமாக பிடித்து விசாரணை நடத்தியதில் அது விழுப்புரத்தைச் சேர்ந்த முனியன் மற்றும் பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பது தெரியவந்துள்ளது. அத்துடன் அவர்கள் கல்லாப் பெட்டியில் வைத்திருந்த 14,000 ரூபாய் பணத்தையும் திருடியுள்ளனர்.

மது பாட்டில்களை திருடிச் செல்லவும் முயற்சித்துள்ளனர் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, போலீசார் இருவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மர்ம நபர்கள் சாவகாசமாக மதுக்கடையில் நுழைந்து பணத்தையும், மது பானங்களையும் திருட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police caught 2 person Inside Of tasmac Illegally


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->