ஏற்கனவே VAO.,வை கொன்னுட்டாங்க! இப்போ எனக்கு கொலை மிரட்டல்! திமுக மாவட்ட து.செ மீது பரபரப்பு புகார்! - Seithipunal
Seithipunal


தென்காசி வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலர் மனோகரன் இருந்து வருகிறார். இவருடைய மனைவி பேச்சியம்மாள்  இரயாதிரி கிராமத்தில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவர் விவசாய நிலங்களுக்காக அரசு அறிவித்துள்ள இலவச வண்டல் மண் எடுக்கும் திட்டத்தின் அடிப்படையில் மண் எடுக்க சிவகிரி வருவாய் ஆய்வாளர் சுந்தரியிடம் மனு அளித்துள்ளார்.

இது குறித்து ஆய்வு செய்த வருவாய் ஆய்வாளர் அந்த இடத்தில் செங்கல் சூளை இருந்ததால் அந்த மனுவை நிராகரித்துள்ளார். இதனால் திமுக நிர்வாகி மனோகரன் அவருடைய அலுவலகத்திற்குச் சென்று கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் திமுக நிர்வாகி மீது சிவகிரி வருவாய் ஆய்வாளர் சுந்தரி தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகிரி வருவாய் ஆய்வாளர் சுந்தரி அளித்த புகாரின் பேரில் திமுக நிர்வாகியான மனோகரன் மீது வழக்குப் பதிவு செய்ய மறுத்த சிவகிரி போலீசார் சி.எஸ்.ஆரில் அவரது புகாரைப் பதிவு செய்ததாக வருவாய்த்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக "மனோகரனின் மனைவி பேச்சியம்மாள் என்பவர் விவசாய நிலத்திற்கு இலவச மண் அள்ளிக் கொள்ள அனுமதி வழங்க கோரி அளித்த மனு தொடர்பாக அவரது இடத்தை பார்வையிட்ட போது மனுதாரர் குறிப்பிட்ட இடத்தில் அனுமதி இன்றி செங்கல் சூளை செயல்பட்டதும், சுமார் 2000 யூனிட் மண் குவிக்கப்பட்டிருந்ததால் இலவச வண்டல் மண் அள்ள அனுமதி வழங்க முடியாது என அந்த மனுவை தள்ளுபடி செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுவை சம்பந்தப்பட்ட உதவியாளரிடம் ஒப்படைத்து விட்டேன்.

இந்த நிலையில் மறுநாள் மாலை சுமார் 4 மணி அளவில் பேச்சியம்மாளின் கணவர் மனோகரன் என்பவர் எனது அலுவலகத்திற்கு வந்து பணி செய்யவிடாமல் தடுத்ததோடு, அவதூறு வார்த்தைகளால் பொதுமக்கள் முன்னிலையில் தவறாக பேசியதோடு மட்டுமல்லாமல் கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.

ஏற்கனவே திருவைகுண்டத்தைச் சேர்ந்த விஏஓ பட்டப்பகலில் கொலை செய்து அனைவரும் அறிந்ததே. எனவே எனக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறும் மேற்கண்ட நபர் இது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மணல் கொள்ளையர்களால் வருவாய்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வரும் நிலையில் தங்களுக்கு பாதுகாப்புக்காக தற்காப்பு பயிற்சி வழங்குவதோடு கைதுப்பாக்கி வழங்க வேண்டும் என வருவாய்த்துறையினர் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ள நிலையில் திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி வருவாய் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police complaint lodged against DMK official who threatened kill revenue inspector


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->