ஐஸ்வர்யா வீட்டில் நகை திருட்டு விவகாரம் - லாக்கர்களில் சோதனை நடத்த போலீசார் முடிவு.! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் லாக்கரில் இருந்த நகைகள் திருடப்பட்டது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

அதில், ஐஸ்வர்யாவின் வீட்டில் வேலை பார்த்து வந்த பெண் ஈஸ்வரி மற்றும் ஓட்டுநர் வெங்கடேசன் உள்ளிட்டோர் சேர்ந்து லாக்கரில் இருந்த நகைகளை சிறிது சிறிதாக திருடி தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. 

அதன் பின்னர் போலீசார் ஈஸ்வரி மற்றும் வெங்கடேசன் உள்ளிட்டோரிடம் இருந்து 100 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். அதுமட்டுமல்லாமல், அவர்களிடமிருந்து வெள்ளி மற்றும் வைர நகைகளும் மீட்கப்பட்டன. 

இதைத்தொடர்ந்து, ஐஸ்வர்யா அளித்த புகாரில் குறிப்பிட்டிருக்கும் அளவை விட வேலைக்காரப் பெண் ஈஸ்வரி வீட்டில் இருந்து அதிக அளவில் கூடுதல் நகைகள் மீட்கப்பட்டதனால், இந்த வழக்கில் போலீசார் அடுத்த கட்ட விசாரணைக்கு சென்றுள்ளனர். 

அதன் படி, போலீசார் திருடப்பட்ட நகைகள் தொடர்பாக கூடுதல் விவரங்களை திரட்ட ஐஸ்வர்யாவின் லாக்கரில் சோதனை நடத்தி அவரிடமும் விசாரணை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். 

இதற்கிடையே, ஐஸ்வர்யா போலீசில் புகார் அளித்தபோது தனது சகோதரி சவுந்தர்யா திருமணத்தின்போது எடுத்த புகைப்படங்கள் அடங்கிய ஆல்பம் ஒன்றை கொடுத்துள்ளார். அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police decided test to aishwarya house lockers


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->