கோவையில் அரை நிர்வாணமாக இளம்பெண் சடலம் மீட்பு - கொலையா? தற்கொலையா? தீவிர விசாரணையில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


கோவையில் அரை நிர்வாணமாக இளம்பெண் சடலம் மீட்பு - கொலையா? தற்கொலையா? தீவிர விசாரணையில் போலீசார்.!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் காந்திபுரம் சக்தி சாலை அருகே தனியாருக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. இந்த இடத்தில் தகரம் மற்றும் தென்னங்கீற்றுகளால் கட்டப்பட்ட கூரைவீடு ஒன்றுள்ளது. இந்த நிலையில் இந்த இடத்திலிருந்து திடீரென துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். 

அப்போது அந்த இடத்தில் எரிந்த நிலையில் அரை நிர்வாணமாக ஒரு பெண்ணின் சடலம் கிடப்பது தெரியவந்தது. அந்த சடலத்தின் அருகில் தண்ணீர் பாட்டில்கள் கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொது மக்கள் சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். 

அந்த தகவலின் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் காவல்துறையினர் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அந்தப் பெண்ணின் உடல் அரை நிர்வாணமாக இருந்ததால் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த சந்தேகத்தின் அடிப்படையில் உயிரிழந்த பெண் யார்? அவர் எவ்வாறு உயிரிழந்தார்? என்று போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police enquiry for woman body rescue in private empty place in covai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->