ஆர்எஸ்எஸ் பேரணி தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது தமிழக காவல்துறை! - Seithipunal
Seithipunal


நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கும் ஆர்எஸ்எஸ்! மறுசீராய்வு மனு தாக்கல் செய்த காவல்துறை!

தமிழகத்தில் அக்டோபர் 2ம் தேதி 51 இடங்களில் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் இயக்கம் அனுமதி கேட்டு தமிழக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி இடம் மனு அளித்திருந்தனர். அந்த மனுவின் மீது பரிசீலனை செய்யாததால் உயர்நீதிமன்றத்தை நாடினர். 

உயர்நீதிமன்றம் நெறிமுறைகளை வழங்கி பேரணி நடத்த அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது. மேலும் காவல்துறையினர் அவர்களின் மனுவை பரிசினை செய்து தகுந்த வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

 

இன்று சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை காரணம் காட்டி தமிழக காவல்துறை எந்த இடத்திலும் ஊர்வலம், பேரணி, பொதுக்கூட்டம் நடத்தவும் எந்த அமைப்பிற்கும் அனுமதி இல்லை என அறிவித்திருந்தது. 

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய விண்ணப்பதாரர்களுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்த மனு எண்ணிடப்பட்டால் நாளை வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என்றும் நீதிபதி இளந்திரையன் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளித்த உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக காவல்துறை மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் தமிழகத்தில் தற்போது நிலவி வரும் சட்ட ஒழுங்கு பிரச்சனையால் மக்களிடையே பதற்றம் நிலவி வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் அனுமதி இன்றி நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே உயர் நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என காவல்துறை சீராய்வு மனுவில் குறிப்பிட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் தரப்புக்கு உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க அனுமதி வழங்கிய நிலையில் தற்போது காவல்துறை சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் தமிழக முழுவதும் இந்த வழக்கானது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police filed a review petition against the verdict of the RSS rally


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->