திருப்பூர் : வாய்க்காலில் கிடந்த ஆண் சடலம்.! போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் வாய்க்காலில் கிடந்த ஆண் சடலம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே பி.ஏ.பி வாய்க்காலில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் இது குறித்து காங்கயம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு உயிரிழந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இறந்து கிடந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police investigating the body of a man found in a drain in Tiruppur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->