சவுக்கு சங்கருக்கு அதிமுக நிர்வாகிகளிடம் தொடர்பா? தீவிர விசாரணையில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த, பிரியாணி கடை அதிபர் கிருஷ்ணன் என்பவரிடம், பண மோசடி செய்ததாக விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் மூலம் யூடியூபர் சவுக்கு சங்கர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

பின்னர், அவர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் சவுக்கு சங்கரை நேற்று முன்தினம் கரூர் நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, நான்கு நாள் காவலில் விசாரிப்பதற்காக, அழைத்து சென்றனர். 

அதன் படி போலீசார் சவுக்கு சங்கரிடம் வாங்கல் காவல் நிலையத்தில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த, அ.தி.மு.க., நிர்வாகிகளிடம் தொடர்பு உள்ளதா? என்று, போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இது குறித்து போலீசார் சார்பில் தெரிவித்ததாவது:- "கடந்தாண்டு மே மாதம், கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் வீடுகளில், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

அதுகுறித்து, சவுக்கு சங்கர் யூ டியூப் சேனலில் பேசியிருந்தார். மேலும், செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார், மனைவி நிர்மலா பெயரில் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை ராம் நகரில் கட்டி வரும், புதிய வீட்டின் முன், சவுக்கு சங்கர் நின்று செல்பி எடுத்து, சமூக வலை தளங்களில் பதிவிட்டு இருந்தார். 

அந்த புதிய வீடு வைரல் ஆனது. இதுபோன்ற சம்பவங்களுக்கு, கரூரை சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகிகள் யாராவது உதவி செய்தார்களா எனவும், தி.மு.க.வினர் குறித்து அவர் வெளியிட்ட வீடியோ பேட்டிகள், விக்னேஷின் பண மோசடி வழக்கு குறித்தும் விசாரித்தனர். மேலும் விசாரணை தொடரும்" என்றுத் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police investigation to savukku sangar


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->