பைக்கில் குத்தாட்டம் போட்ட இளைஞர்.!! ரவுண்டு கட்டிய போலீஸ்.!! கடைசியில் அரங்கேறிய கூத்து.!!
Police nabbed youth who came on bike in erode
ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவிடத்திற்கு கார் மற்றும் பைக்குகளில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பேரணையாக சென்றனர். அப்போது அவர்கள் தாங்கள் ஓட்டி வந்த இரு சக்கர வாகனங்களை முறுக்கிக் கொண்டு சென்றனர். காரில் சென்றவர்கள் வெளியே தொங்கிக் கொண்டும், ஆம்புலன்ஸில் கொடி கட்டியவாறும் சாரை சாரையாக சென்றனர்.
இரு சக்கர வாகனம் மற்றும் கார்களில் போக்குவரத்து விதிகளை மீறிய இளைஞர்களை காவல்துறையினர் கேமிரா உதவியுடன் கண்காணித்து ஒழுங்குப்படுத்தி அனுப்பிக் கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்களில் சிலர் பைக்கில் ஆக்சிலேட்டரை முறுக்கு முறுக்கு என்று திருக்கியதால் போலீசார் எரிச்சல் அடைந்தனர்.
காவல்துறையினர் எச்சரித்தும் அடங்காத ஒரு இளைஞரின் செயல் டி.எஸ்.பியை ஆத்திரம் அடையச் செய்தது. அவர் தனது பைக்கை முருக்கிக்கொண்டே நின்றதால் விரைந்து வந்த அவர் பைக்கின் சாவியை எடுத்துக் கொண்டதோடு பைக்கை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். நூற்றுக்கணக்கான வாதங்கள் சென்ற நிலையில் அந்த ஒரு இளைஞரை மட்டும் போலீசார் ரவுண்டு கட்டி கொடுத்த சவுண்டில் அதிர்ச்சியுடன் பைக்கில் இருந்து இறங்கினார்.
அவரின் பைக் பறிமுதல் செய்து ஓரங்கட்டப்பட்ட நிலையில் கெத்தாக வந்த இளைஞர் தனது பைக்கை பறி கொடுத்து விட்டு வெத்தாக நின்றார். அப்போது காரில் அங்கு வந்த சமுக அமைப்பை சேர்ந்த நிர்வாகி ஒருவர் போலீசாரிடம் கையெடுத்து கும்பிட்டு இளைஞர் சார்பில் மன்னிப்புக்கேட்டதால் போலீசார் மனமிறங்கி சாவியை கொடுத்து அனுப்பி வைத்தனர்.
மீண்டும் பைக்கில் ஏறிய அந்த இளைஞர் போலீசார் நிற்கும் பகுதியை அமைதியாக கடந்து பிறகு கும்பலுக்குள் ஐக்கியமானதும் மீண்டும் பைக்கை முறுக்கிக் கொண்டு சென்றார்அ. இந்த ஊர்வலத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களை வீடியோ காட்சிகளின் அடைப்படையில் அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
English Summary
Police nabbed youth who came on bike in erode