ராணிப்பேட்டை || மதுபோதையில் ஜீப்பை ஒட்டிய போலீசார் - ஏழு வாகனங்கள் சேதம்.!! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை || மதுபோதையில் ஜீப்பை ஒட்டிய போலீசார் - ஏழு வாகனங்கள் சேதம்.!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆவலூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் ஸ்ரீதர். இவர் தமிழ்நாடு கமாண்டோ பயிற்சிப் பள்ளிக்குச் செல்வதற்காக காவல் வாகனத்தில் சககாவலருடன் சென்றார். இதில் காவல் வாகனத்தை ஸ்ரீதர் ஓட்டிச் சென்றார்.

இதையடுத்து இந்த வாகனம் அசோக் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஸ்ரீதரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சாலையில் ஓடி சாலையில் சென்று கொண்டிருந்த மற்றும் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஐந்து இருசக்கர வாகனம், ஒரு மிதிவண்டி, ஒரு கார் என்று அனைத்து வாகனம் மீதும் மோதியது. 

இதில் அனைத்து வாகனங்களும் பலத்த சேதமடைந்தன. இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்த கிண்டி போக்குவரத்துப் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியதில் வாகனத்தை ஓட்டி வந்த காவலர் ஸ்ரீதர் மதுபோதையில் இருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து போலீசார் ஸ்ரீதரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துப்போய் பரிசோதனை மேற்கொண்டனர். அதில் அவர் மதுபோதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் நேற்று இரவு போதையில் வாகனம் ஓட்டிய காவலர் ஸ்ரீதரை கைது செய்தனர். 

போதையில் வாகனத்தை ஓட்டி பொதுமக்கள் வாகனங்களைச் சேதப்படுத்திய போலீஸ்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police officer arrested for drunk and drive in ranipetai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->