தவெக பேனரை அகற்றிய போலீசார் - காஞ்சிபுரத்தில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு மிக பிரமாண்டமாக நடத்தி முடித்தார். 

இந்த மாநாடு அரசியியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து விஜய் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகரம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதற்காக தவெகவினர் மாங்காடு போலீசாரிடம் அனுமதி பெற்று அந்தபகுதிகளில் பேனர்களை வைத்திருந்தனர். உரிய அனுமதி பெற்ற போதும் போலீசார் அதிக அளவில் பேனர்களை வைத்திருப்பதாக கூறி அதனை அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதுகுறித்து தவெகவினர் பேசுகையில், பாதுகாப்பான முறையில் சாலையோரத்தில் பேனர்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும் மற்ற கட்சியினர் போல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைக்கவில்லை எனவும் போலீசார் ஒரு தலை பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினர்.

மேலும் இரண்டு பேனர்கள் வைக்க மட்டுமே போலீசார் அனுமதி கொடுத்ததாகவும், இரண்டு பேனர்கள் மட்டும் நிகழ்ச்சி நடந்த இடத்தில் வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

police remove tvk party banner in kanchipuram


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->