திண்டுக்கல் : பழனியில் மதுபானக் கடைக்குள் புகுந்த போலீசார் - நடந்தது என்ன?
police ride in liquar shop near palani
திண்டுக்கல் : பழனியில் மதுபானக் கடைக்குள் புகுந்த போலீசார் - நடந்தது என்ன?
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி சுற்றுவட்டார பகுதிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையே, பழனி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த அரசு பார்கள் செயல்படுவதற்குத் தடை விதித்து சீல் வைக்கபட்டது.
இதற்கிடையே அரசு மதுபான கடைகளில் ஒரு பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் பெறுவதாக பல்வேறு காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவின.
இந்நிலையில் இன்று பழனி காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் இரண்டு ஆய்வாளர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்ட போலீசார் ஒரே நேரத்தில் பல்வேறு அரசு மதுபானக் கடைகளிலும், தனியார் பார்களிலும் சோதனையில் ஈடுபட்டனர்.
அங்கு தனியார் பார்கள் குறிப்பிட்ட நேரத்தில் திறக்கபடுகிறதா? கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்களா? அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் விதமாக செயல்படுகிறார்களா? முன் கூட்டியே திறக்கபடுகிறதா? உரிமம் பெறபட்டுள்ளதா ? உள்ளிட்ட பல விஷயங்களை போலீசார் சோதனைக்குட்படுத்தினர்.
English Summary
police ride in liquar shop near palani