பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!! - Seithipunal
Seithipunal


முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனையில் வரும் டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் பழனி முருகன் கோயிலின் அடிவாரத்தில் இருந்து மலையில் உள்ள முருகன் கோயில் வரை துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பழனி கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் போலீசாரின் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகிறார்கள். பழனி நகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம் உட்பட அனைத்து இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு சமூகவிரோதிகள் நாச வேலையில் ஈடுபடலாம் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police security at Palani Murugan temple ahead of Babri Masjid demolition day


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->