காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கான உடல் திறன் தேர்வு ஒத்திவைப்பு.!
Police sub inspector physical test postponed
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தை மழைநீர் சூழ்ந்ததால் காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கான உடல் திறன் தேர்வு இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் 444 உதவி ஆய்வாளர் பணி இடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வை ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 487 பேர் எழுதினர். இதில் 1,775 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு நேற்று முன் தினம் நடைபெற்றது.
சென்னை, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஆண்களுக்கும், சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பெண்களுக்கும் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நீளம்-உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், கயிறு ஏறுதல் உள்பட போட்டிகளுடன் உடல்திறன் தேர்வு நேற்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சென்னையில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்ததால், உடல் திறன் தேர்வு நடைபெற இருந்த எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தை மழைதண்ணீர் சூழ்ந்தது. இதனால் இந்த தேர்வு நேற்று நடைபெறவில்லை. ஒத்திவைக்கப்பட்ட இந்த தேர்வு மழைப்பொழிவு இல்லை என்றால் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Police sub inspector physical test postponed