காவல்துறையின் வாகனங்கள்..காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா திடீர் ஆய்வு!
Police vehicles Superintendent of Police Vivekananda Shukla
காவல்துறையின் கனரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா ஆய்வு செய்தார்.
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை ஆயுதப்படை தலைமையக மைதானத்தில், காவல்துறையின் கனரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா என்றும், வாகனங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல்துறை வாகன ஓட்டுநர்களின் குறைகளை கேட்டறிந்து, நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்றும், சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும். எவ்வித விபத்தும் ஏற்படா வண்ணம் வாகனம் ஓட்ட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

இந்த வாகன ஆய்வின் போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன்,(CWC), துணை காவல் கண்காணிப்பாளர்கள் இமயவரம்பன் (இராணிப்பேட்டை உட்கோட்டம்),ரமேஷ் ராஜ் (DCB), சிவராமஜெயன் (ஆயுதப்படை), காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் உடனிருந்தனர்.
English Summary
Police vehicles Superintendent of Police Vivekananda Shukla