ஈரோடு இடைத்தேர்தல் - அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள் மூடல்.!
political party leaders statue closed in erode for by election
கடந்த பதினான்காம் தேதி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக்குறவால் காலமானார். இதையடுத்து தேர்தல் ஆணையம், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியை காலியானதாக அறிவித்தது.
இந்த நிலையில், நேற்று டெல்லியில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பதிவு செய்யப்படும் வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே அதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதியோடு முடிவடையும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 18ஆம் தேதி நடைபெறும் என்றுத் தெரிவித்தார். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.
இதையடுத்து, ஈரோடு மேயர் மற்றும் துணை மேயர் அறைகள் சீல் வைக்கப்பட்டன. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களின் புகைப்படங்களை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும், பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகளை மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
English Summary
political party leaders statue closed in erode for by election