பொங்கல் அதுவுமா சென்னையில் சிக்கிய 376 பேர்! 536 வாகனங்கள் பறிமுதல்! அதிர்ச்சி ரிப்போர்ட்! - Seithipunal
Seithipunal


சென்னையில் பொங்கல் தினத்தன்று மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 376 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து விதிமீறிய 536 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னைப் பெருநகர போக்குவரத்துக் காவல்துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "நேற்று பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு மது அருந்திவிட்டு வாகன ஓட்டுவதை தடுக்கவும், இருசக்கர வாகனங்களில் பந்தயங்களில் ஈடுபடுபவர்களை தடுக்கவும், அதிவேகமாகவும், அபாயகரமாகவும் வாகனம் ஓட்டுபவர்களை தடுக்கவும் சென்னை பெருநகர காவல் 12 மாவட்டங்களில் மொத்தம் 190 இடங்களில் போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துறையினர் இணைந்து வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டது.

காவல் குழுவினர் நேற்று (15.01.2023) இரவு, 5,904 வாகனங்களை சோதனை செய்து, இதில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிய (Drunken Drive) குற்றத்திற்காக வாகன ஓட்டிகள் மீது 376 வழக்குப் பதிவு செய்து, தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணித்தல் (Without Helmet), வாகனங்களும் இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தல் (Triples Ride), இருசக்கர வாகனத்தை அதிவேகமாக அபாயகரமாக ஓட்டுதல் (Over Speed & Dangerous Drive) போன்ற இதர போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 359 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, மொத்தம் 536 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின் பேரில், சென்னை பெருநகரில் பொது மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாகவும், மற்றவர்களுக்கு சிரமமின்றியும், எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல், விபத்தில்லாமல் மகிழ்ச்சியுடன் கொண்டாட சென்னை பெருநகர காவல் துறையினர், எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விரிவாக அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்ததின் காரணமாக, பொதுமக்கள் அமைதியாகவும் சிறப்பாகவும் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

சென்னை பெருநகர காவல் துறை எல்லைக்குள் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மதித்து வாகனங்களை ஓட்டுமாறும் மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீதும், அதிவேகமாகவும், அபாயகரமாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், ரேஸ் போன்ற பந்தயங்களில் ஈடுபட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

மேலும் இதே போன்று அடுத்த இரண்டு நாட்களுக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறையினரால் தொடர்ந்து மேற்கண்டவாறு வாகன தணிக்கைகள் மேற்கொண்டு, போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுவர்கள் மீதும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, அச்சுறுத்தும் வகையிலும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக கடுமையாக எச்சரிக்கப்படுகிறது" என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pongal 2023 chennai police announce


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->