பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை விடுமுறை - வணிகவரி மற்றும் பதிவுத்துறை அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சார்-பதிவாளர் அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று ஆவார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர், சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு 14.01.2023 சனிக்கிழமை அன்று ஒருநாள் மட்டும் செயல்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தைப்பூசம் 05.02.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நிகழ உள்ள நிலையில் அன்றைய தினம் மாநிலத்தில் செயல்படும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் இயங்கிட ஏற்கனவே அரசால் அனுமதி அளிக்கப்பட்டிருந்ததற்கு விலக்களித்தும் உத்திரவிடுமாறு தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கத்திடமிருந்து வரப்பெற்ற கோரிக்கை வந்துள்ளது.

அதனை ஏற்று, மேற்கூறிய 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு 14.01.2023 (சனிக்கிழமை)  அன்று செயல்படுவதில் இருந்து விலக்களிக்கப்படுகிறது. 

மேலும் மாநிலத்தில் செயல்படும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் 05.02.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தைப்பூசத்தை முன்னிட்டு இயங்கிட ஏற்கனவே அரசால் அனுமதி அளிக்கப்பட்டிருந்ததற்கும் விலக்களிக்கப்படுகிறது. 

இவ்விரண்டு தினங்களைத் தவிர இனிவரும் சனிக்கிழமைகளில் மேற்சொன்ன 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும்." என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pongal 2023 sub Register office Leave


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->