பொங்கல் பரிசு திட்டம் கைவிடப்படுகிறதா? என்னதான் ஆச்சு! வெளியான பரபரப்பு தகவல்!
PONGAL Gift 2024 issue
பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் ரேசன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசாக தலா 1 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு, ரூ.1000 ரொக்கம் தருவது வழக்கம்.
பொங்கல் திருநாளுக்கு ஒரு மாதம் முன்பாகவே பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டு, ஜனவரி முதல் வாரத்தில் பரிசுத் தொகுப்பை வழங்கும் பணி தொடங்கி விடும்.
கடந்த ஆண்டு கூட டிசம்பர் மாதம் 22ஆம் நாள் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஜனவரி 2ஆம் நாள் அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.
ஆனால், நடப்பாண்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை. இதன் காரணமாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் கைவிடப்படபடுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
'மிச்சா' புயல், தென்மாவட்டங்களில் பெய்த கனமழை வெள்ள நிவாரண பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை என்பதால் காலம் தாழ்த்தப்படுகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பொங்கல் பரிசு குறித்து ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளதால், இன்னும் ஓரிரு நாட்களில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.